சனி, 1 டிசம்பர், 2012

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

கயல் வளர்க்குமினோ!

Shark Carnivorous Fish Animated Avatars Shark Carnivorous Fish Animated Avatars


எம்மீனும் நன்மீனே இளையோரே கேளுமினே!
....எந்நாளும் மீனுண்ணும் கொள்கையைநீர் கொள்ளுமினோ?
நம்மில்மீன் உண்ணாமல் இளைத்தோரே அறியுமினே!
....நாளொருமீன் உண்பதனால் நலம்சூழும் தெரியுமினோ?
சும்மாய்,மீன் சுவைப்பதனால் விழிமீனும் சிறக்குமினே!
....சுகமாய் மீன்உண்போர்க்கு கொழுப்புடலில் சேருமினோ?
கம்மாய்மீன் கிடைக்காமல் காலமெலாம் வாடுமினே!
....கூட்டாய்மீன் குளங்களிலே வளர்த்திடநீர் கூடுமினோ?

தண்ணீரின் மேற்பரப்பில் அலைமோதும் காற்றாலே
....தடுமாறும் உயிரிகளை கட்லாவும் உண்ணுமினே!
அண்ணாந்து நோக்காமல் இடைப்பரப்பில் அசைந்துவரும்
....அதிமதுரச் சுவையுணவை ‘ரோகு’வுமே ருசிக்குமினே!
மண்ணீருள் சகதியினைக் கீழுதட்டின் கீற்றாலே
....மடித்துறிஞ்சி இரைதேட மிர்கால்மீன் ரசிக்குமினே!
எண்ணீரோ இரைக்காக போட்டியிங்கு ஏதுமினோ?
....எனவேநாம் கூட்டாய்மீன் வளர்ப்பதுதான் தோதுமினே!

மீன்வளர்க்க நீர்நிறைந்த ஏரி,குளம் போதுமினே!
....மின்சாரம், மருந்தென்று செலவெல்லாம் ஏதுமினே?
வான்மழையும், வெயில்,காற்றும் மீன்வளர உதவுமினே!
....வாகான நீர்நிலைக்குள் சாணஉரம் நிரவுமினே!
தோன்றிவரும் மீனுணவும் நீர்முழுதும் ஒளிருமினே!
....தொலிகடலைப் புண்ணாக்கைத் தீவனமாய் தெளியுமினே!
தேன்போலச் சுவையுறுமீன் ஒராண்டில்கிடைக்குமினே!
....தினந்தோறும் மீன்பிடித்து இறைச்சிக்காய் படைக்குமினே!

அயல்மீன்கள் ‘சீன’,‘தோல்’, ‘புல்’கெண்டை அறிந்திடுமின்!
....அனைத்தையுமே கூட்டாக வளர்த்தேதான் பெருக்கிடுமின்!
வயல்நீரில் நெல்லுடனே மீன்வளர்க்கும் முறையறிமின்!
....வாசமிகு செம்மீனை ஒருங்கிணைத்தே பைநிறைமின்!
கயல்மீனும் சுவையினிலே காயல்மீன் போன்றதுமின்!
....கருஞ்சேலின் வெஞ்சினமோ கருவாட்டின் சுவைமிகுமின்!
முயலுமினே! மீன்வளர்க்க வெறும்வாயை மெல்லுமினோ?
....முனைப்பாக தொழில்புரிந்து வருவாயை வெல்லுமினோ!

திங்கள், 22 பிப்ரவரி, 2010

முட்டைக்கோழி...

Click to get cool Animations for your MySpace profile
MySpace Codes!

நாமக்கல்லில் வளர்ந்திருக்கும் வெள்ளைக்கோழி ! - தமிழ்
...நாட்டில் முட்டை வளம் பெருக்கும் பண்ணைக்கோழி!
*கா.ம.க்கல்லூரி யொன்றைத் தந்த கோழி! - சுழற்
...சங்கத்தினர் வழிவகுத்தார் ! அவர் சிந்தை வாழி !
வாமனனாய் வந்துதித்த விந்தைக்கோழி! - பலர்
...வாழ்க்கைதனை ஏற்றிவைத்த சந்தைக்கோழி!
சாமத்திலும் தீனியுண்ணும் முட்டைக்கோழி! - கூடச்
...சேவலின்றி வாடிநிற்கும் பெட்டைக்கோழி !

காவல்மீறிப் போனதில்லை கூண்டுக்கோழி ! - தன்
...கற்புநெறி தாண்டவில்லை கன்னிக்கோழி!
தீவனங்கள் நூறுவகை உண்டகோழி ! - அதைத்
...தின்று தின்று தினம்பெருத்த குண்டுக்கோழி !
'காக்ஸிடியோ’ 'ஐபிடி’யோ கண்டநாழி! - பல
...கோழிப்பண்ணையாள்ர்களைத் தின்ற கோழி !
வாக்ஸினை நீ கண்டுபிடி என்றுகோரி ! கோழி
...வல்லுனர்க்கு வேலை தந்த வேடதாரி !

மூக்குடைந்த வேளையிலும் தின்றதீனி - வெண்
...முட்டையென மாற்றிவைத்த தங்கமேனி !
தேக்கிவைத்த ஆசைகளை மொத்தமாய் நீ! - எம்
...தேசமெங்கும் ரீங்கரிக்க வைத்ததேனீ !
நாக்கில்ருசி கண்டதில்லை என்றுமேநீ - ஒரு
...நீர்க்குமிழாம் வாழ்க்கையில் ஓர் தெய்வமேநீ
வாக்குமனம் காயமெல்லாம் பாழும்கேணி - சிவ
...வாக்கியரின் வார்த்தையென சொல்லுவாய்நீ!

வெண்புரட்சி செய்துவைத்தீர் தொய்வில்லாமல் - உம்
...சங்குநிற மேனி சற்றும் சலித்திடாமல்!
வெண்புரதம் நெய்துதந்தீர் ஓய்வில்லாமல் - இதை
...வேறுவகை விலங்கெதுவும் அளித்திடாது!
பண்புடனே நீங்கள்தரும் புரதம்யாவும் - எங்கள்
...பிள்ளைகளை மேம்படுத்த நீங்கும் நோவும்!
கண்படுமே உமக்குப்புகழ் நானும் சூட்ட - உம்மை
...கலியுகத்து பிரமன் என்றுசொல்லி வாழ்த்துவோமே!

*(கால்நடை மருத்துவக்கல்லூரி)

பால்மோகம்...

அன்று..

பரிணாம வளர்ச்சியில் பகுத்தறிவு பெற்ற
ஆறறிவு, ஐந்தறிவின் கால்மாட்டில்
மண்டியிட்டு மடிப்பிச்சை கேட்டது!

எங்களின் கர்ண காமதேனுக்கள்
"கோ"குழலோசையில், கன்றுகளை மறந்துபோய்,
வேணுகோபாலனுக்காய் வேண்டிய பாலை
வெண்ணையாகவே சுரந்தது!

எம் அன்னையின் சீதனமாம் சீம்பாலை - நீர் சுவைக்க
வைக்கோலைத்தின்றே பூஞ்சைகளானது
எங்கள் சவலைக்கன்றுகள்! - உமது
விசித்திரப்பார்வையில் - அவை
வீரியமற்ற விதைகளானது!

எங்களைத் தரமுயர்த்த !?
மேல்நாட்டுக் காளைகளின் விந்தேற்றும்
விஞ்ஞான வேலைகளை
வெட்கமில்லாமல் செய்தீர்கள்!

பாலுக்காக கலப்பினம்தேடி
கோமாதாக்களை களங்கப்படுத்தினீர்கள்!- நாங்களோ
விரைநசுங்கி, ஏரிழுத்து
இந்தியாவை வயல்களால் வாழவைத்தோம்!

ஆதிசிவன் வாகனத்தின் வாரிசுகள் - நாங்கள்!
எங்கள் உமையவளைக் காணாமல்
பாலுறவும் மறுக்கப்பட்டு - இன்று
அடிமாடுகளாய்!
அவலக்காளைகளாய் - நாங்கள்!

மீண்டும் ஒரு சுதந்திர வேட்கை! - அந்த
வெள்ளையனை வெளியேற்றி
எங்களின் பால்மோகம் தீர்க்க - தாய்
நாட்டு வளத்தின்பால் மோகம்கொண்டு
அடிமைவிலங்கை அவிழ்க்க யார் வருவாரோ?

இப்படிக்கு,
- அடிமாடுகள்

சனி, 20 பிப்ரவரி, 2010

காமதேனு...

காதலாகிப் போனேன் - பசுவின் - கருணை கண்டு நானே!
வேதமாகி நாளும் - நமது -தேவைக்காக வாழும்!
தீது நன்மையெல்லாம் - பாரில் - தீரக்க வல்ல தெய்வம்
சூதுவாது இல்லா - பசுவின் - பிறப்பு எனக்கு வேண்டும்!

அமைதி காத்து வந்தாய் - பசுவே - அடக்கமாக வளர்நதாய்!
சுமைகள் நூறு வந்தும் - சற்றும் - சலிப்பில்லாமல் நீயே
உமையின் உருவில் பிறந்து - உலகோர் - உய்ய பால் சுரந்தாய்!
இமைக்குள் காக்கும் தாயாய் - என்றும் - எம்மைப் பாதுகாத்தாய் !

தாய்கொடுக்கும் பாலை -இரண்டு - ஆறுமாத காலம்
சேய்குடித்தபின்னே - நீதான் -தாதியாகிப்போனாய்!
பாய் விரித்த போதும் - காலை - கண்விழித்த போதும்
நோய் பிடித்தபோதும் - உந்தன் - பாலில் உடல் வளர்த்தோம்!

இந்த அளவு பாலை - உனது - கன்றும் குடித்ததில்லை!
எந்த வயதும் நாங்கள் - உந்தன் - பாலை மறந்ததில்லை!
சொந்தபந்தம் நீயே - சொல்ல - வார்ததையேதும் இல்லை!
விந்தை காமதேனு - உன்னைப் - போற்றி வணங்குகின்றோம்!